‘ஐ’யால் பாதிப்பு! உதவி கரம் நீட்டிய சுரேஷ் கோபி!

‘ஐ’யால் பாதிப்பு! உதவி கரம் நீட்டிய சுரேஷ் கோபி!

செய்திகள் 28-Jan-2015 3:58 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம், சுரேஷ்கோபி முதலானோர் நடித்து ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படம் கடந்த 14-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது அல்லவா! திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் இப்படம் வெளியான அன்று பெரும் கூட்டம் கூடியதால் அந்த கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தியேட்டர் காவலாளி ஸ்ரீகுமார் என்பவர் அடிப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது மொத்த உடம்பே செயலிழந்த நிலையில், அவர் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகர் சுரேஷ் கோபி அவருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். அத்துடன் சுரேஷ் கோபி இந்த தகவலை படத்தின் ஹீரோ விக்ரம், மற்றும் இயக்குனர் ஷங்கருக்கும் தெரிவிக்க, அவர்களும் ஸ்ரீகுமாருக்கு உதவி செய்வதாக கூறியிருக்கிறார்களாம். ஸ்ரீகுமாருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;