‘என்னை அறிந்தால்’ ரிலீஸாகும் தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டலா?

‘என்னை அறிந்தால்’ ரிலீஸாகும் தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டலா?

செய்திகள் 28-Jan-2015 11:35 AM IST Chandru கருத்துக்கள்

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அஜித் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது. அதற்கான புரமோஷன் வேலைகளும், ரிலீஸ் செய்யப்படவிருக்கும் தியேட்டர் புக்கிங் வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படம் வெளியாகவிருக்கும் சென்னை உதயம் தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மர்ம ஆசாமி ஒருவர் இக்கடிதத்தை நேற்று இரவு உதயம் தியேட்டருக்கு அனுப்பி இருக்கிறாராம். இதனையடுத்து இதுகுறித்த புகார் மனு ஒன்றை தியேட்டர் நிர்வாகம் காவல்துறையிடம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர் யார் என்ற விசாரணை தற்போது துவங்கியிருக்கிறதாம்.

ஏற்கெனவே அஜித்தின் ‘வீரம்’ படம் வெளியான சமயத்திலும் இதேபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டதாம். சமீபத்தில்கூட 108 அவசர சேவைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;