பிப்ரவரி 5ல் அஜித்துடன் களமிறங்கும் சிம்பு!

பிப்ரவரி 5ல் அஜித்துடன் களமிறங்கும் சிம்பு!

செய்திகள் 28-Jan-2015 11:01 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் புரமோஷன் வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. இன்னொருபுறம் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கியிருக்கும் இப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. படம் ‘யு’வாக இருந்தாலும், ‘யு/ஏ’வாக இருந்தாலும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாவது 100% உறுதி என்கிறார்கள். இதனால் தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலிருக்கிறார்கள்.

இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு திரையரங்கில் இன்னொரு விருந்தும் காத்திருக்கிறது. ஆம்... பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீஸர் சமீபத்தில் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ள இந்த டீஸரை பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ படத்துடன் திரையரங்கிலும் வெளியிடப்போவதாக சிம்பு அறிவித்திருக்கிறார். சின்னத்திரை பார்த்து ரசித்த இந்த டீஸரை பிப்ரவரி 5 முதல் பெரிய திரையிலும் ரசிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;