‘நச்’ நாயகியாகிய ‘ஆம்பள’ மதூரிமா!

‘நச்’ நாயகியாகிய ‘ஆம்பள’ மதூரிமா!

செய்திகள் 28-Jan-2015 10:22 AM IST Chandru கருத்துக்கள்

தெலுங்கில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை மதூரிமாவின் முதல் தமிழ் படம் ‘சேர்ந்து போலாமா’. வினய்க்கு ஜோடியாக அவர் நடித்த இப்படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால், அதற்கு முன்பாகவே விஷாலின் ‘ஆம்பள’ படம் வெளியாகிவிட்டது. இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக மதூரிமா நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு சின்ன வேடம்தான் என்றாலும் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் மதூரிமா.

ஹாஷிம் மரிகர் இயக்கும் க்ரைம் த்ரில்லரான ‘நச்’ படத்தில் 12 முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை மதூரிமாவும் ஒருவராக களமிறங்குகிறார். ஹீரோ, ஹீரோயின் என யாரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத இப்படத்தில் அந்த 12 கேரக்டர்கள்தான் முக்கிய பங்கு வகிக்குமாம். இப்படத்திற்காக மும்பையிலிருந்தும் சில நாயகிகளை இறக்குமதி செய்திருக்கிறார்கள். மம்முட்டியின் உறவினரான மக்பூல் சல்மான் எனும் மலையாள நடிகரும் இப்படத்தில் நடிக்கிறார்.

ஜுனியர் என்.டி.ஆருடன் மதூரிமா நடித்திருக்கும் ‘டெம்ப்பர்’ தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;