பக்கத்தில் பாம்பு... பயந்து நடுங்கிய ஆனந்தி!

பக்கத்தில் பாம்பு... பயந்து நடுங்கிய ஆனந்தி!

செய்திகள் 28-Jan-2015 10:06 AM IST Chandru கருத்துக்கள்

‘பொறியாளன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆனந்திக்கு, பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த ‘கயல்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதனால் தற்போது இரண்டு படங்களில் நடிப்பதற்கு அம்மணி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ‘நய்யாண்டி’ சற்குணம் இயக்கும் ‘சண்டி வீரன்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஆனந்தி.

இப்படத்தின் ஷூட்டிற்காக தஞ்சாவூரிலுள்ள ஏரி ஒன்றில் சமீபத்தில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். மான்டேஜ் பாடலுக்கான இந்த படப்பிடிப்பின்போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று நின்று கொண்டிருந்ததாம். முதலில் இதை கவனிக்காததால் தைரியமாக நடித்துக் கொண்டிருந்த ஆனந்தி, தன் பக்கத்தில் பாம்பு இருப்பதை உணர்ந்ததும் அந்த இடத்தைவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார். பின்னர், அந்த ஏரிக்கு அருகே பாம்பு நடமாட்டம் இருப்பதெல்லாம் ரொம்பவும் சகஜம் என்பதை உணர்ந்துகொண்டு பயத்தை வெளியில் காட்டாமல் நடித்து முடித்திருக்கிறார்.

‘டார்லிங்’, ‘பென்சில்’ படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திலும் ஆனந்திதான் நாயகி. இதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;