தமிழ் க்ரைம் தொடர்கதையை ஹிந்தி படமாக்கும் பிரபுதேவா?

தமிழ் க்ரைம் தொடர்கதையை ஹிந்தி படமாக்கும் பிரபுதேவா?

செய்திகள் 28-Jan-2015 9:45 AM IST Chandru கருத்துக்கள்

தனது முதல் படத்தைத் தவிர்த்து பிரபுதேவா இயக்கிய படங்களில் பெரும்பாலானவை ரீமேக் படங்கள்தான். தமிழில் இயக்கிய போக்கிரி, வில்லு, வெடி படங்களையும் ஹந்தியில் இயக்கிய வான்டட், ரௌடி ரத்தோர், ராமையா வஸ்தாவய்யா, ஆக்ஷன் ஜாக்ஸன் போன்ற படங்களையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்போது முதல்முறையாக பிரபல தமிழ் க்ரைம் தொடர்கதை ஒன்றை படமாக்கும் எண்ணத்தில் பிரபுதேவா இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘க்ரைம் கதை மன்னன்’ எனப் பெயர் பெற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார் பிரபல வாரஇதழ் ஒன்றிற்காக சமீபத்தில் ‘வெல்வெட் குற்றங்கள்’ என்ற தொடர்கதை ஒன்றை எழுதினார். காணாமல் போன மலேசிய விமானத்தை மையமாக வைத்து கற்பனையாக உருவாக்கப்பட்ட இந்தத் தொடர்கதைக்கு வாசகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது அந்த தொடர்கதை நிறைவு பெற்றுவிட்டது. இந்த தொடரை இயக்குனர் பிரபுதேவாவும் தவறாமல் படித்து வந்திருக்கிறார். இதை படமாக்கினால் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டதால் எழுத்தாளர் ராஜேஷ்குமாரை அழைத்து இதுகுறித்து அவர் பேசியிருப்பதாகத் தெரிகிறது.

இதனால் அவர் இயக்கவிருக்கும் அடுத்த ஹிந்தி படம் ‘வெல்வெட் குற்றங்கள்’ தொடர்கதையின் பாதிப்பில் உருவாக்கப்படும் என்கிறார்கள். இப்படத்தில் அக்ஷய் குமாரை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - செந்தூரா வீடியோ


;