முக்கிய மைல்கல்லை எட்டிய சிம்பு, சிவகார்த்திகேயன்!

முக்கிய மைல்கல்லை எட்டிய சிம்பு, சிவகார்த்திகேயன்!

செய்திகள் 27-Jan-2015 3:38 PM IST Chandru கருத்துக்கள்

சிம்புவும், சிவகார்த்திகேயனும் இதுவரை செய்யாத சாதனை ஒன்றை செய்திருக்கிறார்கள். ‘எதிர்நீச்சல்’ டீமின் அடுத்த படமான ‘காக்கி சட்டை’ படத்தில் முதல்முறையாக போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதோடு இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோ அவதாரமும் எடுத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் கடந்த 10ஆம் தேதி வெளியானது. டிரைலர் வெளியாகி 15 நாட்களிலேயே 20 லட்சம் பார்வையிடல்களைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறது. சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை அவரின் முந்தைய படமான ‘மான் கராத்தே’ படத்தின் டிரைலரை 17 லட்சம் முறை பார்த்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. தற்போது ‘காக்கி சட்டை’ டிரைலர் மூலம் முதல்முறையாக 20 லட்சம் பார்வையிடல் என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இளமைத் துள்ளும் இந்த டீஸருக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து டீஸர் வெளியான 12 நாட்களிலேயே 20 லட்சத்திற்கும் மேல் பார்வையிடப்பட்டு ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் சிம்புவிற்கு படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவருக்கிருக்கும் வரவேற்பு கொஞ்சம் குறையாததால் உற்சாகத்திலிருக்கிறார் சிம்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;