அஜித்துடன் மீண்டும் படம் - ஏ.எம்.ரத்னம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித்துடன் மீண்டும் படம் - ஏ.எம்.ரத்னம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 27-Jan-2015 3:26 PM IST VRC கருத்துக்கள்

அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தான் இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தையும் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தையும் ஏ.எம்.ரத்னமே தயாரிக்கிறார். அஜித் நடிப்பில் ‘வீரம்’ படத்தை இயக்கிய ‘சிறுத்தை’ சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ‘என்னை அறிந்தால்’ படம் வெளியானதும் துவங்குமாம்! இப்படி அஜித் நடிப்பில் தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் ஏ.எம்.ரத்னம் அது குறித்து பேசும்போது,

‘‘அஜித் நடித்து தமிழில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘காதல் கோட்டை’ படத்தை தெலுங்கில் நான் தான் டப்பிங் செய்து வெளியிட்டேன்! அப்படம் தெலுங்கில் தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேல் ஓடியது. தெலுங்கு ‘காதல் கோட்டை’ வெற்றிப் பெற்றதிலிருந்தே அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்து வந்தது. பல வருடங்களாக என் மனதில் இருந்த ஆசை ‘ஆரம்பம்’ பத்துடன் நிறைவேறியது. ‘ஆரம்பம்’ படத்தை தொடர்ந்து இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தை தயாரித்துள்ளேன். இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கும் படத்தையும் நானே தயாரிக்கிறேன். இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு என்னை அறிந்தால் படம் வெளியான பிறகு வரவிருக்கிறது. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுவபம்’’ என்றார் ஏ.எம்.ரத்னம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;