‘அனேகன்’ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏஜிஎஸ்!

‘அனேகன்’ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏஜிஎஸ்!

செய்திகள் 27-Jan-2015 3:14 PM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் வரும் 29ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘அனேகன்’ படத்தின் ரிலீஸ் தேதியும் மாறுகிறது என நேற்றுமுதல் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘அனேகன்’ படம் காதலர்தினத்தை முன்னிட்டு, அதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாவதை இரண்டு வாரங்களுக்கு முன்பே அதன் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் உறுதி செய்திருந்தது. படமும் ‘யு’ சான்றிதழ் வாங்கி ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அஜித் படத்தை பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதால், அதற்கு அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் ‘அனேகன்’ படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர் கிடைக்காதென்பதால் படத்தின் ரிலீஸை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதாக ஒரு சில இணையதளங்கள் வதந்திகளைக் கிளப்பி வந்தன. ஆனால், இதனை மறுத்துள்ள ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, ‘‘தயவுசெய்து அனேகன் படம் குறித்த தவறான செய்திகளை பரப்பாதீர்கள். படம் திட்டமிட்டபடி 13ஆம் தேதி வெளியாகும்!’’ என ட்வீட் செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;