ஏ.வெங்கடேஷின் ‘ரொம்ப நல்லவன்டா நீ’

ஏ.வெங்கடேஷின் ‘ரொம்ப நல்லவன்டா நீ’

செய்திகள் 27-Jan-2015 11:48 AM IST VRC கருத்துக்கள்

சரத்குமார் நடிப்பில் ‘சண்டமாருதம்’ படத்தை இயக்கியுள்ள ஏ.வெங்கடேஷ் இப்போது ‘ரொம்ப நல்லவன்டா நீ’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். ‘ராண்டேவோ மூவி மேக்கர்ஸ்’ சார்பில் தீபக் குமார் நாயர் தயாரிக்கும் இப்படத்தில் ‘மிர்ச்சி’ செந்தில் கதாநாயகனாக நடிக்க, சுருதி பாலா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வில்லனாக ‘எத்தன்’ படப் புகழ் சர்வஜித் நடிக்க, இயக்குனர் ஏ.வெங்கடேஷும், ரோபோ சங்கரும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறும்போது, ‘’என் படங்களில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் உண்டு! ஆனால் ஒரு முழு நீள காமெடி படத்தை இதுவரை இயக்கியதில்லை. முன் பின் தெரியாத இரண்டு நண்பர்களின் ஏழு நாட்கள் நட்பு, அதன் பின் தொடர்ச்சியாக அவர்களுக்குள் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களுடன் காமெடி த்ரில்லராக உருவாகி வரும் படமே இது’’ என்றார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை மனோகர் ஏற்றிருக்க, ராம் சுரேந்தர் இசை அமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் இப்படக் குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரொம்ப நல்லவன்டா நீ டிரைலர்


;