திரு இயக்கத்தில் ஜெய்!

திரு இயக்கத்தில் ஜெய்!

செய்திகள் 27-Jan-2015 10:55 AM IST VRC கருத்துக்கள்

வருண்மணியனின் ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனமும், சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜனின் ‘ஃபிலிம் டிபார்ட்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தற்போது தயாரிக்கும் படம் ‘புகழ்’ இப்படத்தில் ஜெய் கதாநாயகானாக நடிக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து இதே நிறுவனங்கள் இணைந்து அடுத்ததாக, ஜெய் நடிப்பில் மற்றுமொரு படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தை ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்குகிறார். இப்படத்தில் இசைக்கு தமன், ஒளிப்பதிவுக்கு ரிச்சர்ட் எம்.நாதன், எடிட்டிங்குக்கு ரூபன், கலைக்கு ஜாக்கி, காஸ்ட்யூமுக்கு நிரஞ்சனி என பெரிய டெக்னீஷியன்கள் இணைந்து பணியாறற இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கும்பகோணத்தில் படமாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா


;