பாலிவுட்டையும் பந்தாடி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற சென்னை அணி!

பாலிவுட்டையும் பந்தாடி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற சென்னை அணி!

செய்திகள் 27-Jan-2015 10:50 AM IST Chandru கருத்துக்கள்

நடந்து கொண்டிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் (CCL) நமது கோலிவுட் வீரர்கள் அணி தொடர்ந்து கலக்கி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் கேரளா, மராத்தி அணியை தோற்கடித்த சென்னை ரைனோஸ் அணி நேற்று அஹமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டியேத்தில் மும்பை ஹீரோஸ் அணியுடன் மோதியது.

டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை ஹீரோஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 157 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பாக பரத் 2 விக்கெட்டுகளையும், விஷ்ணு, விக்ராந்த், ஷாம், அஷோக் செல்வன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். மும்பை அணியின் ராஜா பெர்வானி அதிகபட்ச 44 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.

பின்னர் 158 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை ரைனோஸ் அணி அதிரடியாக ஆடி 15.3 ஓவர்களிலேயே 161 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. விக்ராந்த் 49 பந்துகளில் 63 ரன்களையும், விஷ்ணு 32 பந்துகளில் 52 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரமணா 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 63 ரன்களையும், 1 விக்கெட்டையும் கைப்பற்றிய நடிகர் விக்ராந்த் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சென்னை ரைனோஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளதால் வீரர்கள் மைதானத்தில் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;