ஒரே நேரத்தில் சிட்டி, வில்லேஜ் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்!

ஒரே நேரத்தில் சிட்டி, வில்லேஜ் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்!

செய்திகள் 27-Jan-2015 10:19 AM IST Chandru கருத்துக்கள்

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’, சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, பாபி சிம்ஹாவுடன் ‘பாம்புச்சட்டை’ என கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் பலமான அறிமுகப் படங்கள் காத்திருக்கின்றன. இதில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கேரக்டர் அமைந்திருக்கிறது அவருக்கு.

சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறாராம். அதேநேரம் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘இது என்ன மாயம்’ படத்தில் மாடர்ன் கேர்ளாக முற்றிலும் வேறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார். அதோடு ‘பாம்புச்சட்டை’யிலும் வித்தியாசமான வேடம்தானாம். கேரளாதான் கீர்த்தி சுரேஷின் பூர்வீகம் என்றாலும் அம்மா தமிழ் என்பதால் தமிழ்ப் படங்களில் நடிப்பது எளிதாக இருப்பதாகக் கூறுகிறார் 22 வயது அழகுப் புயலான கீர்த்தி சுரேஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ


;