திருமதி ஆன ‘காவலன்’ நாயகி மித்ரா குரியன்!

திருமதி ஆன ‘காவலன்’ நாயகி மித்ரா குரியன்!

செய்திகள் 27-Jan-2015 9:57 AM IST Chandru கருத்துக்கள்

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘காவலன்’ படத்தில் அசினுடன் இன்னொரு நாயகியாக மலையாள நடிகை மித்ரா குரியனும் நடித்திருந்தார். இவருக்கும் அவருடைய நீண்ட நாள் நண்பர் வில்லியம் பிரான்சிஸ் என்பவருக்கும் நேற்று (ஜனவரி 26) திருச்சூரிலுள்ள சர்ச் ஒன்றில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், நட்பு வட்டாரங்கள் புடைசூழ இந்த திருமணம் கிறிஸ்துவ முறைப்படி சிறப்பாக நடந்து முடிந்ததாம்.

கீபோர்ட் பிளேயரான வில்லியமிற்கும், மித்ராவிற்கும் சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே நல்ல நட்பு இருந்திருக்கிறது. மேடை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்ட இருவருக்கும் நட்பு காதலாக மலர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் தற்போது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர்கள் பலருக்கும் கீபோர்டு வாசித்துள்ளாராம் மித்ராவின் கணவர் வில்லியம் பிரான்சிஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;