10 தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்த ‘வஜ்ரம்’ பட தயாரிப்பாளர்!

10 தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்த ‘வஜ்ரம்’ பட தயாரிப்பாளர்!

செய்திகள் 27-Jan-2015 9:50 AM IST VRC கருத்துக்கள்

விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, அருண் விஜய் நடித்த ‘ஜன்னம்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள படம் ‘வஜ்ரம்’ இப்படத்தில் ‘பசங்க’, ‘கோலி சோடா’ படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி நால்வரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, பவானி ரெட்டி என்ற புதுமுகம் கதையின் நாயகியாக நடித்துள்ளார். கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘ஸ்ரீசாய் ராம் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஜெய்சந்த் ஜெயின் தயாரித்திருக்கிறார். புதியவர் எஃப்.எஸ்.பைசல் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (25-1-15) மாலை சென்னையில் நடந்தது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘கலைப்புலி’ எஸ்.தாணு, செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.சிவா, ராதா கிருஷ்ணன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து இப்படத்தை தயாரித்திருக்கும் ஜெய்சந்த் ஜெயின், மனித நேயத்துடன் நலிந்த நிலையில் உள்ள 10 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார். அத்துடன் தான் எதிர்காலத்தில் தயாரிக்கும் ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் இது மாதிரி நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். 10 தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவிகளை வழக்கிய ஜெய்சந்த் ஜெயினை அத்தனை பேரும் பாராட்டினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;