வேறு நிறுவனத்திற்கு கைமாறிய பாலா படம்!

வேறு நிறுவனத்திற்கு கைமாறிய பாலா படம்!

செய்திகள் 27-Jan-2015 9:45 AM IST VRC கருத்துக்கள்

தனது ‘பி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ‘பரதேசி’ படத்தை தயாரித்து இயக்கிய பாலா, அதன் பின் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’ படத்தை தயாரித்தார். இப்படத்தை தமிழகம் முழுக்க முரளியின் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிட்டது. இந்த படங்களை தொடர்ந்து பாலா தனது ‘பி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தயரித்துள்ள படம் ‘சண்டி வீரன்’. இப்படத்தில் அதர்வா, ஆனந்தி கதாநாயகன் - கதாநாயகியாக நடிக்க, சற்குணம் இயக்கியிருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து விரைவில் படமும் ரிலீசாகவிருக்கிறது.

‘சண்டி வீரன்’ டத்தினை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியிடும் உரிமையை எம்.எஸ்.சரவணனின் ‘ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. இந்த நிறுவனம் தான் விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ திரைப்படத்தை தமிழகம் முழுக்கவும் வெளியிட்டது. அத்துடன் ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் ‘கயல்’ ஆகிய படங்களின் சிட்டி உரிமையையும், ‘பீட்சா-2’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘வெள்ளக்கார துரை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களை செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட்டதும் இந்நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;