தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள்!

செய்திகள் 27-Jan-2015 9:40 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி 2015-2017ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் நேற்று முன் தினம் (25-1-15) சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு ‘கலைப்புலி’ எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், ஹென்றி, ராஜேந்திரன், மன்சூரலிகான் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர். அதில் ‘கலைப்புலி’ எஸ்.தாணு அதிக வாக்குகளை பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 துணை தலைவர்களுக்கான போட்டியில் பி.எல்.தேனப்பனும், எஸ்.கதிரேசனும் வெற்றிப் பெற்றார்கள். பொருளாளருக்கான போட்டியில் டி.ஜி.தியாகராஜன் அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். 2 செயலாளர் பதவிக்கு டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த சங்கத்தின் 21 செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில் மொத்தம் 73 பேர் போட்டியிட்டனர். அதில் சங்கிலி முருகன், கோவை தம்பி, சித்ரா லட்சுமணன், ஆர்.கே.செல்வமணி, பவித்ரன், வி.சேகர், தமிழ் மணி, மோகன், சௌந்தர், மன்னன், ஆர்.வி.உதயகுமார், விஜயமுரளி, போஸ், ஆர்.மாதேஷ், ‘கலைப்புலி’ ஜி.சேகரன், எச்.முரளி, ரிஷிராஜ், கஃபார், ‘பிரமிட்’ நடராஜன், நளினி சுப்பையா, மனோஜ் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த சங்கத்தில் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உட்பட பலர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஆயிரகணக்கான உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில் ஓட்டு போடக்கூடிய தகுதியுடைவர்களின் எண்ணிக்கை 967 பேர் மட்டும் தான்!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்வாகியுள்ள புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நேற்று (26-1-15) மாலை சென்னை கோயம்பேட்டிலுள்ள ராதா பார்க் இன் ஹோட்டலில் சிறப்பாக நடந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;