நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்!

நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்!

செய்திகள் 24-Jan-2015 8:00 PM IST VRC கருத்துக்கள்

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89. நாடக நடிகராக தனது கலைத்துறை வாழ்க்கையை துவங்கிய வி.எஸ்.ராகவன் பிறகு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். அத்துடன் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள வி.எஸ்.ராகவன் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற ஜாம்பவான்களின் காலத்து நடிகர்களில் சிறந்து விளங்கிய ஒரு நடிகராவார். நாடகங்களாகட்டும், சினிமாவாகட்டும், தொலைக்காட்சி தொடராகட்டும் அதில் தனது இயல்பானா நடிப்பால் அனைவரையும் கவரக்கூடிய வல்லமை படைத்தவராவார் வி.எஸ்.ராகவன! வி.எஸ்.ராகவனின் மறைவு தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு பெரும் இழப்பாகும். அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;