7 கதாநாயகர்கள், 5 கதாநாயகிகள் நடிக்கும் படம்!

7 கதாநாயகர்கள், 5 கதாநாயகிகள் நடிக்கும் படம்!

செய்திகள் 24-Jan-2015 3:27 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் 17 படங்களை தயாரித்துள்ள நிறுவனம் ‘மரிக்கார் ஃபிலிம்ஸ்’. இந்த 17 படங்களில் பெரும்பாலன படங்களும் வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘மரிக்கார் ஆர்ட்ஸ்’ தமிழில் முதன் முதலாக தயாரிக்கும் படம் ‘நச்’. திரைத்துறை சம்பந்தப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை கொண்ட படமாம் ‘நச்’. இப்படத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ், சஞ்சீவ், பிரவீன் பிரேம், மக்பூல் சல்மான் உட்பட 7 கதாநாயகர்கள், மதுரிமா பானர்ஜி, எதன், பூனம் ஜாவர் உட்பட 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரியாஸ்கான், காளி ஆகியோரும் நடிக்கிறார்கள்! இவர்களில் மக்பூல் சல்மான் நடிகர் மம்முட்டியின் அண்ணனும், பிரபல நடிகருமான இப்ராகிம் குட்டியின் மகன் ஆவார். ஏற்கெனவே 5 மலையாள படங்களில் நடித்துள்ள மக்பூல் சல்மான் தமிழில் நடிக்கும் முதல் படம் இது. மதுரிமா பானர்ஜி விஷாலின் ‘ஆம்பள’ மற்றும் பரத் நடித்த ‘கூதற’ மலையாள படங்களில் நடித்தவர். பூனம் ஜாவர் ‘சுமுகரா’ மற்றும் பிரபுதேவா இயக்கிய ‘ரா…ராஜ்குமார்’ ஹிந்தி படங்களில் நடித்தவர்.

7 கதாநாயகர்கள், 5 கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தினை ஹசிம் மரிக்கார் எழுதி, இயக்குகிறார். மன்சூர் அகமது இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்கி கேரளா - கொச்சின், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. மலையாள வெற்றிப் படங்களை தயாரித்து, வெளியிட்ட அனுபவத்துடன் தமிழுக்கு வந்திருக்கும் இவர்கள், ‘நச்’ படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெரு நாய்கள் - டிரைலர்


;