தொடர்ந்து 3 வாரங்களில் 3 தனுஷ் படங்கள்!

தொடர்ந்து 3 வாரங்களில் 3 தனுஷ் படங்கள்!

செய்திகள் 24-Jan-2015 1:21 PM IST Chandru கருத்துக்கள்

தனுஷின் சினிமா கேரியரில் இதுபோன்ற ஒரு அபூர்வ சூழ்நிலை இதற்கு முன்பு ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே! ஆம்... அடுத்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) முதல் தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமையும் தனுஷ் படங்கள் வெளியாகவிருக்கின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2011ல் வெளிவந்து 6 தேசிய விருதுகளை வென்ற ‘ஆடுகளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் வரும் 30ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு ‘பண்டெம்கொல்லு’ என பெயர் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’யின் தெலுங்கு டப்பிங்கான ‘ரகுவரன் பி.டெக்.’ படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதால் இந்த ‘பண்டெம்கொல்லு’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம்.

அதற்கடுத்த வெள்ளிக்கிழமையான பிப்ரவரி 6ஆம் தேதி அமிதாப் பச்சனுடன் தனுஷ் இணைந்து நடித்திருக்கும் ‘ஷமிதாப்’ படம் உலகமெங்கும் வெளியாகிறது. அதனையடுத்து பிப்ரவரி 13ஆம் தேதி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘அனேகன்’ படம் திரைக்கு வருகிறது. 3 வாரங்கள், 3 மொழிகளில் தான் நடித்த 3 படங்கள் வரவிருப்பதால் அப்படங்களின் வரவேற்பு எப்படியிருக்கும் என்பது குறித்து நகம் கடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;