ஐஸ்வர்யா ராயிடம் தனுஷ் கேட்க மறந்த கேள்வி?

ஐஸ்வர்யா ராயிடம் தனுஷ் கேட்க மறந்த கேள்வி?

செய்திகள் 24-Jan-2015 11:44 AM IST VRC கருத்துக்கள்

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் இணைந்து நடித்துள்ள ‘ஷமிதாப்’ ஹிந்திப் படம் அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) 6-ஆம் தேதி உலகம் முழுக்க பெரிய அளவில் ரிலீசாகவிருக்கிறது. பிரபலமான ‘ஈராஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, பி.சி.ஸ்ரீராம ஒளிப்பதிவு செய்துள்ளார். பால்கி, தனுஷ், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், அக்‌ஷரா ஹாசன் என தென்னகத்தை சேர்ந்த பிரபலங்கள் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள ‘ஷமிதாப்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை அருகேயுள்ள சத்தியபாமா கல்லூரியில் நடந்தது. கிட்டத்தட்ட 5000 மாணவ மாணவியருக்கு மத்தியில் தனுஷ், பால்கி, அக்‌ஷரா ஹாசன் முதலானோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் சத்தியபாமா கல்லூரியின் நிறுவனர் ஜேப்பியாரும் கலந்துகொண்டார்.

அப்போது தனுஷிடம் ஒரு மாணவர், ‘‘தனுஷ், சமீபத்தில் மும்பையில் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வந்த ஐஸ்வர்யா ராயிடம் நீங்கள் ‘என் மாமானாருடன் நீங்க நடிச்சீங்க, உங்க மாமானாருடன் நான் நடிச்சேன்’’ என்று சொன்னீங்களா?’ என்று கேட்டதும் அரங்கமே அதிரும் வகையில் பலத்த கைத்தட்டல்களும், சிரிப்பும்! இந்த கேள்விக்கு தனுஷ் பதில் அளிக்கும்போது, ‘‘உண்மையிலேயே நீங்க சொன்ன விஷயம் எனக்கு இப்பதான் ஸ்டிரைக் ஆச்சு! அடுத்த முறை ஐஸ்வர்யா ராய் பச்சனை பார்க்கும்போது இதை சொல்லி விடுகிறேன்’’ என்றார். அடுத்ததாக தனுஷிடம் ‘‘ஷமிதாப்’ படத்தை பொறுத்தவரை யார் ஷமிதாப்?’’ என்று கேட்டபோது, ‘‘இந்தப் படத்தை பொறுத்தவரை இப்படத்திற்கு இசை அமைத்துள்ள இளையராஜா சார் தான் ஷமிதாப்’’ என்றார்.

அடுத்ததாக இயக்குனர் பால்கியிடம், ‘‘தனுஷை இந்த படத்திற்கு தேர்வு செய்ய காரணம் என்ன? என்று கேட்டதற்கு, ‘‘தனுஷ் கோலிவுட்டுக்கு மட்டும் சொந்தமான நடிகர் கிடையாது. இந்தியாவுக்கே சொந்தமான நடிகர்!’’ என்றார். அதை தொடர்ந்து அவரிடமே ‘‘ஷமிதாப் படத்தை பொறுத்தவரை அமிதாப் – தனுஷ், அக்‌ஷரா ஹாசன் – தனுஷ் இதில் யாருடைய கெமிஸ்ட்ரி ரொம்பவும் வொர்க்-அவுட் ஆகியிருக்கு?’’ என்று கேட்டபோது, அமிதாப் – தனுஷுக்கு இடையில் ‘ஃபிசிக்ஸ்’ வொர்க் அவுட் ஆகியிருக்கு! தனுஷ் – அக்‌ஷரா ஹாசனுக்கிடையில் ‘கெமிஸ்ட்ரி’ வொர்க் அவுட் ஆகியிருக்கு என்று தமாஷாக பதில் சொன்னதும் மீண்டும் அரங்கம் அதிர பலத்த கைத்தட்டல்!

அடுத்த கேள்வியாக அக்‌ஷரா ஹாசனிடம், ‘‘உங்களை பொறுத்தவரை இப்படத்தில் ஷமிதாப் யார்? என்று கேட்டதும், ‘‘டக்’கென்று இயக்குனர் பால்கி சார்’’ என்று பதில் அளித்து தான் கமல்ஹாசனின் மகள் தான் என்பதை நிரூபித்தார் அக்‌ஷரா ஹாசன்!

கலகலப்பாக நடந்த இந்த விழாவில் ‘பிக் பி’ அமிதாப்பச்சனும், இசைஞானி இளையராஜாவும், பி.சி.ஸ்ரீராமும் கலந்துகொள்ளாதது ஒரு குறையாகவே இருந்தது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;