ஆர்யாவுக்கு தமன்னா... சந்தானத்துக்கு பானு!

ஆர்யாவுக்கு தமன்னா... சந்தானத்துக்கு பானு!

செய்திகள் 24-Jan-2015 11:20 AM IST Chandru கருத்துக்கள்

‘அழகுராஜா’ படத்தைத் தொடர்ந்து எம்.ராஜேஷ் தற்போது ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தை இயக்கி வருகிறார். ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். வழக்கம்போல் ஹீரோவின் நண்பனாக இப்படத்திலும் சந்தானமே நடிக்கிறார். கதைப்படி வாசுவான ஆர்யாவும், சரவணனான சந்தானமும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். அவர்கள் வளர்ந்து பெரியவனானதும் அவர்களுக்குள் நடக்கும் விஷயங்களைத்தான் இப்படத்தில் காமெடியாக சொல்லவிருக்கிறாராம் இயக்குனர்.

ஆர்யாவுக்கு தமன்னாவை ஜோடியாக்கியதைப்போல், ‘தாமிரபரணி’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ படங்களில் நடித்த பானுவை சந்தானத்திற்கு ஜோடியாக்கியிருக்கிறார்கள். சந்தானத்தின் ஜோடி என்றாலும் பானுவின் வேடம் மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம். தற்போது ஆர்யா, தமன்னா சம்பந்தப்பட்ட மான்டேஜ் பாடல் ஒன்றை சென்னை சிட்டியில் படமாக்கி வருகிறார்கள். விரைவில் சந்தானமும், பானுவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;