அஜித் இடத்தை பிடித்த எஸ்.ஜே.சூர்யா!

அஜித் இடத்தை பிடித்த எஸ்.ஜே.சூர்யா!

செய்திகள் 24-Jan-2015 10:28 AM IST VRC கருத்துக்கள்

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, தயாரித்து, இசை அமைத்து, நடித்துள்ள ‘இசை’ திரைப்படம் இம்மாதம் 30-ஆம் தேதி ரிலீசாகிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டு கால உழைப்பில் எஸ்.ஜே.சூர்யா உருவாக்கியுள்ள இப்படம் இரண்டு பிரபல இசை அமைப்பாளர்களுக்கிடையில் நடக்கும் ஈகோ பிரச்சினைகளை மையமகாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்று கூறப்படுகிறது. அந்த இரண்டு இசை அமைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யாவும், சத்யராஜும் நடிக்க, இவர்களுடன் சாவித்திரி என்ற புதுமுகம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தை உலகம் முழுக்க 300 தியேட்டர்களுக்கும் மேல் வருகிற 30-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா! இம்மாதம் 29-ஆம் தேதி அஜித்தின் என்னை அறிந்தால் படம் வெளியாக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டு அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது எஸ்.ஜே.சூர்யாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டதால் எஸ்.ஜே.சூர்யா தனது ‘இசை’யை 30-ஆம் தேதி வெளியிடுகிறார். இதே தினம் பரத்தின் ‘கில்லாடி, எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘டூரிங் டாக்கீஸ்’ மற்றும் ‘தரணி’ ஆகிய படங்களும் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;