வசந்த் படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்!

வசந்த் படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்!

செய்திகள் 24-Jan-2015 9:33 AM IST VRC கருத்துக்கள்

பிரபல எழுத்தாளர் அசோக் மித்ரன் எழுதியுள்ள நாவலான ‘தண்ணீர்’ திரைப்படமாகிறது. இதனை அதே பெயரில் இயக்குனர் வசந்த் இயக்குகிறார். இன்றைய காலகட்டத்தில் தண்ணிர் குறைபாடு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த தண்ணீர் பிரச்சனை மிக மோசமாகி விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞானிகள்! இப்படியிருக்கும் தருணத்தில் ‘தண்ணீர்’ என்ற பெயரில் வசந்த் இயக்கும் இப்படம் எல்லோரது கவனத்தையும் பெறுகிறது. கிராஸ் வேல்ட் ஃபிலிம்ஸும் வசந்த சித்திரம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் - ஹாலிவுட் நடிக்ர் குல்ஷன் கோவர் மற்றும் சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரபல கர்நாக இசைப் பாடகியான சுதாரகுநாதன இப்படத்திற்கு இசை அமைத்து சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஒருவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடந்தது. இவ்விழாவில் எழுத்தாளர் அசோக் மித்ரன், இயக்குனர் பாரதிராஜா, குல்ஷன் கோவர், சாந்தினி, சுதா ரகுநாதன், இயக்குனர் வசந்த முதலானோர் கலந்துகொண்டனர். கே.பாலச்சந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தை தொடர்ந்து இப்போது அவரது சிஷ்யரான வசந்த் ‘தண்ணீர்’ என்ற படத்தை வசந்த் சாய் என்ற பெயரில் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;