‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ வழியில் ‘என்னை அறிந்தால்’?

‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ வழியில் ‘என்னை அறிந்தால்’?

செய்திகள் 23-Jan-2015 3:11 PM IST Top 10 கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு என்ன சென்சார் சான்றிதழ் கிடைக்கும்? படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக எப்போது அறிவிப்பார்கள் என நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘தல’ ரசிகர்கள். 29ஆம் தேதி படம் வெளியாகும் என ஏ.எம்.ரத்னமே உறுதி கொடுத்திருந்த நிலையில், நேற்றுமுதல் படத்தின் ரிலீஸை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. அதற்கு காரணமாக, படத்தின் டி.ஐ. வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், சென்சார் வாங்காததையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு இன்று நண்பகல் 12 மணிக்கு ‘என்னை அறிந்தால்’ படம் சென்சார் அதிகாரிகளுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டதாம். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமிருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், படத்திற்கு ‘யு’ வாங்கும் நோக்கத்தோடு மறு தணிக்கை செய்யவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ரிலீஸ் தேதியுடன் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே கௌதம் மேனன் இயக்கிய போலீஸ் சம்பந்தப்பட்ட படங்களான சூர்யாவின் ‘காக்க காக்க’, கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற படங்களும் யு/ஏ சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;