சிறப்பாக நடந்து முடிந்த த்ரிஷாவின் நிச்சயதார்த்தம்!

சிறப்பாக நடந்து முடிந்த த்ரிஷாவின் நிச்சயதார்த்தம்!

செய்திகள் 23-Jan-2015 1:51 PM IST Chandru கருத்துக்கள்

தமிழின் முன்னணி நடிகையான த்ரிஷாவுக்கும், காவியத்தலைவன், வாயை மூடி பேசவும் படங்களின் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று சென்னை ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் த்ரிஷாவிற்கும், வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

மும்பை பேஷன் டிசைனர்களால் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட பட்டுச்சேலையை த்ரிஷா அணிந்து வந்திருந்தது பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருந்ததாம். அதேபோல் இந்த நிச்சயதார்த்தத்திற்காக பிரத்யேக மேடை அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் விலையுயர்ந்த வைர மோதிரம் ஒன்றை த்ரிஷாவின் விரலில் அணிவித்தார் வருண் மணியன். நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததும் விருந்தும் பாரிமாறப்பட்டதாம்.

கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திரையுலக பிரபலங்களுக்கு விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறவிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;