அனிருத்துடன் மலேசியா செல்லும் தனுஷ்?

அனிருத்துடன் மலேசியா செல்லும் தனுஷ்?

செய்திகள் 23-Jan-2015 12:59 PM IST Chandru கருத்துக்கள்

முதல்முறையாக தனிப்பட்ட முறையில் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை மலேசியாவில் நடத்தவிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். மலேசியாவில் உள்ள ‘சன்வே லகூன்’ எனும் தீம் பார்க்கில் வரும் 31ஆம் தேதி இரவு இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. கோல்டன் கூஸ் ஈவன்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்ச்சியில் அனிருத்தின் இசையில் பாடிய பாடகர்கள் பங்குகொண்டு நேரடியாகப் பாடவிருக்கிறார்கள்.

‘கொலவெறி’ மூலம் உலகப்புகழ்பெற்ற தனுஷும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனிருத்துடன் இணைந்து பாடவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு மலேசியாவில் எப்போதும் அமோக ஆதரவு இருக்கும். அதைப்போலவே இந்த நேரடி இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளும் பரபரப்பாக விற்பனையாகி வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;