ரஜினியின் கௌரவ கிரீடத்தில் பதியவிருக்கும் கோகினூர் வைரம்!

ரஜினியின் கௌரவ கிரீடத்தில் பதியவிருக்கும் கோகினூர் வைரம்!

செய்திகள் 23-Jan-2015 11:22 AM IST Chandru கருத்துக்கள்

சூப்பர்ஸ்டார் என்று இந்திய சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, மகாராஷ்டிராவின் ‘ராஜ்கபூர் விருது’, விஜய் டிவியின் செவாலியே சிவாஜி கணேசன் விருது, என்டிடிவியின் ‘25 வாழும் சாதனையாளர்கள்’ பட்டியலில் இடம்பிடித்தது, இந்திய அரசின் 3வது உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருது, சமீபத்தில் கோவாவில் நடந்து முடிந்த 45வது சர்வதேச திரைப்பட விழாவில் பெற்ற ‘இந்திய நூற்றாண்டின் சிறந்த ஆளுமை’க்கான விருது என ஏகப்பட்ட வைரங்களால் ஜொலிக்கிறது அவரின் கௌரவ கீரீடம். தற்போது அதில் மேலும் ஒரு வைரக்கல்லைப் பதிக்கவிருக்கிறதாம் மத்திய அரசு. அதுவும் கோகினூர் வைரம்!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில், பத்ம விருதுகளை வழங்கி வருகிறது இந்திய அரசு. நாட்டின் 65வது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், 148 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதில் நடிகர்கள் திலீப் குமார், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நாட்டிலேயே 2வது உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது ரஜினிக்கு வழங்கப்பட இருக்கிறதாம் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி


;