‘காக்கி சட்டை’க்காக பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் அனிருத்!

‘காக்கி சட்டை’க்காக பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் அனிருத்!

செய்திகள் 23-Jan-2015 11:02 AM IST Chandru கருத்துக்கள்

எதிர்நீச்சல், மான் கராத்தே படங்களைத் தொடர்ந்து ‘காக்கி சட்டை’ படத்திலும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். முந்தைய இரண்டு படங்களின் பாடல்களைப்போலவே ‘காக்கி சட்டை’ படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கும் ஆதரவு குவிந்து வருகிறது. குறிப்பாக இந்த டிரைலரில் அனிருத்தின் பின்னணி இசையை பல ரசிகர்களும் பாராட்டித் தள்ளியுள்ளனர்.

முதன்முறையாக ‘காக்கி சட்டை’ அணிந்திருக்கும் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத்தின் பின்னணி இசை எப்படியிருக்கும் என்பதுதான் தற்போது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு. அதோடு இப்படம் சிவகார்த்திகேயனை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் எனவும் அவரின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘காக்கி சட்டை’ படத்தின் பின்னணி வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்டதாக ‘ட்வீட்’ செய்திருக்கும் அனிருத், இப்படத்தையும், அதன் பின்னணி இசையையும் ரொம்பவும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

படம் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;