பிரபல தெலுங்கு நடிகர் எம்.எஸ்.நாராயணா மரணம்!

பிரபல தெலுங்கு நடிகர் எம்.எஸ்.நாராயணா மரணம்!

செய்திகள் 23-Jan-2015 10:34 AM IST Chandru கருத்துக்கள்

தென்னிந்திய திரையுலகில் மிகப்பெரிய காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த எம்.எஸ்.நாராயணா மரணமடைந்துவிட்டதாக தெலுங்கு திரையுலகத்திலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மாய்லவரப்பு சூர்யா நாராயணா என்ற எம்.எஸ்.நாராயணாவுக்கு தற்போது வயது 63. கடந்த சில தினங்களாக உடல்நிலை மேசமடைந்த காரணத்தால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் அவர் மரணமடைந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 20 வருடங்களாக தெலுங்குத் திரையுலகில் தங்களோடு பயணித்து வந்த நாராயணா காரு இந்த உலகைவிட்டுப் பிரிந்ததை எண்ணி தெலுங்கு திரையுலகம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

தமிழில் சித்தார்த் நடித்த ‘180’ படத்தில் எம்.எஸ்.நாராயணா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய சினிமாவிற்கு பேரிழப்பு ஏற்படுத்தியுள்ள அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது ‘டாப் 10 சினிமா’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆகடு புதிய டிரைலர்


;