அப்பாடி.... ஒருவழியாக ரிலீஸாகிறது பரத்தின் ‘கில்லாடி’

அப்பாடி.... ஒருவழியாக ரிலீஸாகிறது பரத்தின் ‘கில்லாடி’

செய்திகள் 23-Jan-2015 10:17 AM IST Chandru கருத்துக்கள்

இப்படி ஒரு படத்தில் தான் நடித்ததை இந்நேரம் பரத்தே மறந்து போயிருப்பார். 2006ஆம் ஆண்டு சேலம் சந்திரேசகர் தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ‘கில்லாடி’ படத்தில் பரத் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், அதன் பிறகு சிற்சில காரணங்களால் அப்படத்தின் படப்பிடிப்பு உடனடியாக துவங்கவில்லை. சேலம் சந்திரசேகர் நிதி பிரச்சனைகளால் சூழப்பட்டது, கூடல்நகர், நேபாளி படங்களில் பரத் பிஸியானது, மாஞ்சா வேலு, வல்லக்கோட்டை போன்ற படங்களின் இயக்கத்தில் ஏ.வெங்கடேஷ் மும்முரமானது என பல தடைகளையும் தாண்டி 2013ஆம் ஆண்டே இப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.

மளமளவென படப்பிடிப்பை நடத்தி முடித்து படம் 2013 இறுதியிலேயே ரிலீஸாகுக்கு ரெடியாகிவிட்டாலும், எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்பது புரியாத புதிராகவே தொடர்ந்தது. அவ்வப்போது ‘கில்லாடி’ படத்தின் ரிலீஸ் விளம்பரங்கள் பத்திரிகைகளில் தோன்றும். ஆனால் படம் ரிலீஸாகாது. இந்நிலையில் எல்லாம் நல்லபடியாக முடிந்து தற்போது வரும் 30ஆம் தேதி படத்தை வெளியிடுவது என்பது உறுதியாகிவிட்டதாம். மீண்டும் ‘கில்லாடி’ படத்தின் ரிலீஸ் விளம்பரங்கள் நாளேடுகளில் தென்படுகின்றன. ஆனால் இந்தமுறை ‘கில்லாடி’ வருவது உறுதி என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;