சிவகார்த்திகேயனுடன் சந்தானத்தை இணைக்கிறாரா சுந்தர்.சி?

சிவகார்த்திகேயனுடன் சந்தானத்தை இணைக்கிறாரா சுந்தர்.சி?

செய்திகள் 23-Jan-2015 9:54 AM IST Chandru கருத்துக்கள்

சமீபகால சுந்தர்.சி படங்களில் கண்டிப்பாக சந்தானத்திற்கும் ஒரு முக்கிய ரோல் கொடுக்கப்பட்டிருக்கும். கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனையைத் தொடர்ந்து பொங்கலுக்கு வெளியான ‘ஆம்பள’ படத்திலும் சந்தானத்தின் காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், சுந்தர்.சி தான் இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் சந்தானத்திற்கு முக்கிய கதாபாத்திரம் ஒன்றைக் கொடுக்கவிருக்கிறார் என்ற செய்தி அவரின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து கிடைத்திருக்கிறது.

‘ஆம்பள’ படத்திற்குப் பிறகு தான் இயக்கப்போகும் படம் குறித்து இரண்டுவித சிந்தனைகளிலிருக்கிறாராம் சுந்தர்.சி. ஒன்று... அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது, இன்னொன்று 1996ல் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் 2ம் பாகத்தை எடுப்பது. ஏற்கெனவே சிவகார்த்திகேயனிடம் சுந்தர்.சியின் மனைவியும், நடிகையுமான குஷ்பு கால்ஷீட் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதனால் ‘உள்ளத்தை அள்ளித்தா’வில் கார்த்திக் நடித்த கேரக்டரில் சிவகார்த்திகேயனையும், கவுண்டமணி கேரக்டரில் சந்தானத்தையும் நடிக்க வைக்க வாய்ப்பிருக்கிறதாம்.

ஒருவேளை அது சரியாக வராவிட்டாலும், ‘அரண்மனை’யின் 2ம் பாகத்தில் சிவகார்த்திகேயனையும், சந்தானத்தையும் சேர்த்து வைத்து படமெடுப்பது என்ற முடிவில் சுந்தர்.சி உறுதியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். சிவகார்த்திகேயனும், சந்தானமும் தனித்தனியாக நடித்தாலே காமெடிக்கு சொல்லத்தேவையில்லை, இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால், அதுவும் சுந்தர்.சியின் இயக்கத்தில் என்றால், அப்படம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே எதிர்பார்ப்பு எகிறுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கலகலப்பு 2 - டீசர்


;