பிப்ரவரி 6-ல் திரைக்கு வருகிறது வஜ்ரம்!

பிப்ரவரி 6-ல் திரைக்கு வருகிறது வஜ்ரம்!

செய்திகள் 23-Jan-2015 9:37 AM IST VRC கருத்துக்கள்

முழுக்க முழுக்க கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘வஜ்ரம்’. கல்விதான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தையும், ஒரு நாட்டின் முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியம். அடுத்த தலைமுறைகள் சிறப்பாக அமையவேண்டுமானால் அதற்க்கு கல்வி மிகவும் அவசியம். அப்படிப்பட்ட கல்விக்காக போராடும் நான்கு சிறுவர்கள் பற்றிய கதையை கொண்ட இப்படத்தில் ‘பசங்க’, ‘கோலிசோடா’ வெற்றிப் படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கதை திரைக்கதை அமைத்து எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.குமரேஷன் ஒளிப்பதிவு செய்ய, ஃபைசல் இசை அமைத்துள்ளார். ‘சாய்ராம் ஃபிலிம் பேக்டரி’ பட நிறுவனம் சார்பில் பி.ராமு தயாரித்துள்ள இப்படத்தை வருகிற ஃபிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;