வில்லன் நடிகராக மாறிய வழக்கறிஞர்!

வில்லன் நடிகராக மாறிய வழக்கறிஞர்!

செய்திகள் 23-Jan-2015 9:32 AM IST VRC கருத்துக்கள்

சென்னையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் சாம் பால். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராக திகழ்ந்து வரும் இவர், ஜெயந்தன் இயக்கும் ‘பட்ற’ என்ற படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகிறார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘இயக்குனர் ஜெயந்தன் என்னுடைய உயரம் மற்றும் ஆஜானுபாகுவான தோற்றத்தை கண்டு ‘பட்ற’ பட கதையில் வரும் ஒரு கேரக்டருக்கு நீங்கள் ரொம்பவும் பொருத்தமாக இருக்கிறீர்கள் என்று கூறி அதில் என்னிடம் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். பணத்திற்காக எதையும் செய்யும் கேரக்டர் அது. நான் அந்த கேரக்டரை ஏற்றுக்கொண்டு நடித்தேன். வில்லத்தனமான நடிப்பு புதுமையாக இருந்தது. ஆனால் சண்டை காட்சிகளில் நடிப்பது தான் கடினமாக இருந்தது. எனது நடிப்பை பார்த்த படக்குழுவினரும், என் நண்பர்களும் பாராட்டினார்கள். இந்தப் படத்துடன் மேலும் சில படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆனால் ‘பட்ற’ படம் வெளியான பிறகே அந்த படங்களில் கவனம் செலுத்த உள்ளேன்’’ என்றார் சாம் பால். ‘பட்ற’ படம் ஃபிப்ரவரி கடைசியில் ரிலீசாக இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;