அருள்நிதி படத்தில் ஒரு புதுமை!

அருள்நிதி படத்தில் ஒரு புதுமை!

செய்திகள் 23-Jan-2015 9:24 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் வழக்கமாக பாடல்களை படமாக்கிவிட்டு தான் அப்பாடல்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் பாடல்களை வெளியிட்டு அதன் பிறகு ஒரு பாடலை படமாக்கிய புதுமையை நிகழ்த்தி காட்டியுள்ளனர் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படக் குழுவினர். அருள்நிதி, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கி வருகிறார். புதுமுக இசை அமைப்பாளர் ரெஜினா இசை அமைக்கிறார். இவர் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இப்பாடல்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறும் இப்படக் குழுவினர், அதில் வரும் ‘காதல் கனிரசம்...’ என்று துவங்கும் ஒரு பாடலை சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள சொக்கி தானியில் அழகிய அரங்கங்கள் அமைத்து தற்போது படமாக்கி வருகிறார்கள். பாடல் வெளியான பிறகு அந்த பாடலை படமாக்குவது என்பது சினிமாவில் அரிதான விஷயம்! ‘லியோ விஷன்ஸ்’ மற்றும் ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்யா - டிரைலர்


;