சிம்பு எடுத்த உறுதிமொழி!

சிம்பு எடுத்த உறுதிமொழி!

செய்திகள் 23-Jan-2015 8:55 AM IST Chandru கருத்துக்கள்

மூன்று வருடமாக படமே வரவில்லை என்றாலும், சிம்புவிற்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சமும் குறையவில்லை என்பதைத்தான் காட்டுகிறது ‘இது நம்ம ஆளு’ டீஸருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு. சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், குறளரசன் இசையில் உருவாகி வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த 15ஆம் தேதி வெளியானது. வெளியாகி ஒரே வாரத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த டீஸரைக் கண்டுகளித்துள்ளனர். சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்துத்தர ரசிகர்களிடையேயும் இந்த டீஸருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியிலிருக்கும் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,

‘‘என் படத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிக்கவும் மகிழ்ச்சி. நீண்ட இடைவெளிக்கு பிறகு எனக்கும், என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை பலபடுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என உறுதியாக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் சிம்பு.

சிம்புவின் இது நம்ம ஆளு, வாலு படங்கள் இந்த வருட முதல் அரையாண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;