ராஜமௌலி படத்தை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன்!

ராஜமௌலி படத்தை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன்!

செய்திகள் 22-Jan-2015 4:57 PM IST Chandru கருத்துக்கள்

‘ஈகா’ (தமிழில் நான் ஈ) படத்தைத் தொடர்ந்து தற்போது ‘பாஹுபலி’ தெலுங்கு படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்கி வருகிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் தமிழில் ‘மஹாபலி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் உருவாக்கப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் முந்தைய படங்களான மாவீரன், நான் ஈ ஆகிய தமிழ் மொழி மாற்றுப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த ‘மஹாபலி’ படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதோடு மிகப்பெரிய பட்ஜெட், பெரிய பெரிய செட்கள், ஹாலிவுட் தர கிராபிக்ஸ் காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருவதால் இந்திய அளவில் இப்படம் பெரிய எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறது.

வரும் கோடை விடுமுறையில் தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டுடியோ கிரீன்’ வாங்கியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;