‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்?

‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்?

செய்திகள் 22-Jan-2015 3:51 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடிவடைந்து படம் சென்சாருக்கு தயாராக இருக்கிறது. படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் ‘யுகே’ வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் (அதிகாரபூர்வ கணக்கா என்பது தெரியவில்லை) ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் ஜனவரி 29ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் வேகவேகமாக செய்தி பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;