சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ : லேட்டஸ்ட் தகவல்கள்!

சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ : லேட்டஸ்ட் தகவல்கள்!

செய்திகள் 22-Jan-2015 12:17 PM IST Chandru கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம’ படத்தின் கூட்டணியான இயக்குனர் பொன்ராம், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் மீண்டும் ‘ரஜினி முருகன்’ மூலம் கைகோர்த்திருக்கிறார்கள். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இயக்குனர் சமுத்திரக்கனியும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

ஏற்கெனவே மதுரை, திருச்சி உட்பட பல இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கும் ‘ரஜினி முருகன்’ டீம் நேற்று முதல் 3வது ஷெட்யூலுக்கான படப்பிடிப்பைத் துவங்கியிருக்கிறது. மொத்தம் 45 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த 3ஆம் கட்ட படப்பிடிப்பில் காரைக்குடி, தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள். முதல் 2 ஷெட்யூல்களில் 50% மேலான படப்பிடிப்பை முடித்தவர்கள், இந்த 3வது ஷெட்யூலில் 90% படப்பிடிப்பை நடத்தி முடிக்கவிருக்கிறார்கள்.

அதோடு இமான் இசையில், யுகபாரதி வரிகளில் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ‘என்னமா இப்டி பண்றீங்களேமா...’ பாடலுக்கான படப்பிடிப்பையும் நடத்தவிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் பங்குகொள்ளும் இந்த குத்துப் பாடலுக்கான படப்பிடிப்பு நாளை மறுநாள் (ஜனவரி 24) டி.இமான் பிறந்தநாளன்று நடைபெறவிருக்கிறதாம்.

இப்படத்தை உழைப்பாளர் தினமும், அஜித் பிறந்தநாளுமான மே 1ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காக்கி சட்டை’ படம் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - டிரைலர்


;