‘என்னை அறிந்தால்’ ரன்னிங் டைம் எவ்வளவு?

‘என்னை அறிந்தால்’ ரன்னிங் டைம் எவ்வளவு?

செய்திகள் 22-Jan-2015 11:29 AM IST Chandru கருத்துக்கள்

பொங்கலுக்கே வெளியாக வேண்டிய படம்.... லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம்... கௌதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’. வரும் 29ஆம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்திருக்கும் இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து சென்சாருக்கு ரெடியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்ற தகவல் கசிந்திருக்கிறது. மொத்தம் 2 மணி, 32 நிமிடங்கள் ஓடும் படமாக ‘என்னை அறிந்தால்’ உருவாகியிருக்கிறதாம். ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியிருப்பதால், சென்சாரில் தணிக்கை செய்யும்போது ‘கட்’ ஏதும் செய்யப்பட்டால் இந்த நேரம் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறதாம்.

அஜித் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும், அனுஷ்காவும் நடித்திருக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றை ஏற்றிருக்கிறார் அருண் விஜய். இசை ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு டான் மெக்கார்தர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;