திருநங்கைகளை ஷங்கர் கேவலப்படுத்தவில்லை! - ‘ஐ’ ஓஜாஸ் ரஜனி

திருநங்கைகளை ஷங்கர் கேவலப்படுத்தவில்லை! - ‘ஐ’ ஓஜாஸ் ரஜனி

செய்திகள் 22-Jan-2015 10:48 AM IST Top 10 கருத்துக்கள்

ஷங்கரின் ‘ஐ’ படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. அதேநேரம், படத்தில் திருநங்கைகளை கேவலப்படுத்தும் விதமாக காட்சிகளை வைத்திருக்கிறார்கள் என்றும், அதனை ‘ஐ’ படத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் திருநங்கைகள் பலர் ஒன்றுகூடி சென்னை தணிக்கை அலவலுகம் முன்பு போராட்டம் நடத்தினர். அதோடு ‘ஐ’ படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மறு தணிக்கை செய்ய முடியாது எனவும், இப்பிரச்சனையை சட்டபூர்வமாக அணுகிக் கொள்ளும்படியும் தணிக்கை குழு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் ‘ஐ’ படத்தில் சர்ச்சைக்குரிய மேக்அப் ஆர்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்தவரும், திருநங்கையுமான ஓஜாஸ் ரஜனி பத்திரிகைகளுக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ‘‘என் கதாபாத்திரத்தை கேலி செய்யும்விதமாக எந்த காட்சியையும் ‘ஐ’ படத்தில் ஷங்கர் சார் திணிக்கவில்லை. எனவே அவருக்கெதிராக கோபப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்வதை தயவுசெய்து கைவிடவும். இன்னும் சொல்லப்போனால் எனக்கு அப்படத்தில் அழகான கேரக்டரைக் கொடுத்திருக்கிறார் ஷங்கர். அந்த கதாபாத்திரத்தின்படி ஹீரோ மேல் நான் காதல் கொள்வது போலவும், பின்னர் அது கைகூடாததால் அவரை பழிவாங்குவது போலவும்தான் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பெரிய படத்தில் திருநங்கையான நான் நடித்ததை நினைத்து நாம் பெருமைப்படத்தான் வேண்டுமே தவிர, எதிராக குரல் கொடுக்க வேண்டாம். தற்போது நான் படப்பிடிப்பு ஒன்றிற்காக வெளிநாடு வந்திருக்கிறேன். எனவே இந்த அறிக்கையையே என்னுடைய வேண்டுகோளாக மதித்து தயவுசெய்து ஷங்கர் சாருக்கு எதிரான போராட்டங்களை கைவிட வேண்டுமென உங்களை கேட்டுக்கொள்கிறேன்’’ என குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;