ஒரே நேரத்தில் 7 படங்கள்!

ஒரே நேரத்தில் 7 படங்கள்!

செய்திகள் 22-Jan-2015 10:32 AM IST VRC கருத்துக்கள்

தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவதே சவாலான விஷயம்! அப்படியிருக்க, Fox & Crow Studios என்ற நிறுவனமும் Q Laureat என்ற நிறுவனமும் இணைந்து ஒரே நேரத்தில் 7 படங்களை தயாரித்து, அந்த படங்களை வரிசையாக விரைவில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளது. அந்த படங்களின் பெயர்கள் விவரம் வருமாறு:

1.ஜனவரி மழையில் ஒரு ஹாய்
2.கடவுள் இருக்கான் குமாரு
3.லந்து
4.கொள்ளக்கூட்ட பாஸ்
5.வட்ட செயலாளர் வண்டு முருகன்
6.நீங்க புடுங்கிற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணிதான்
7.கோக்

இந்த 7 படங்களின் கதையையும் ராஜேஷ் கண்ணன் எழுதியிருக்க, அதில் ‘ஜனவரி மழையில் ஒரு நாள்’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்களை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்தப் படங்களை முதலில் ரிலீஸ் செய்து அதன் பின் மற்ற படங்களை 3 மாத இடைவெளியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ராஜேஷ் கண்ணன் கடந்த 15 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் பல துறைகளிலாக பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்பதோடு, ‘பெருமாள்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த அனுபவங்களை வைத்து ஏராளமான கதைகளை எழுதியிருக்கும் ராஜேஷ் கண்ணனின் தொடர் முயற்சியால் தான் 7 கதைகளை ஒரே நேரத்தில் தயாரிக்க முன் வந்துள்ளது மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் நிறுவனங்களான, Fox & Crow Studios மற்றும் Q Laureat நிறுவனம்! இந்த 7 படங்களின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ‘ஸ்டுடியோ 9’ நிறுவன அதிபர் சுரேஷ் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;