ரித்திக் ரோஷனுடன் ஜோடி சேரத் துடிக்கும் டாப்ஸி!

ரித்திக் ரோஷனுடன் ஜோடி சேரத் துடிக்கும் டாப்ஸி!

செய்திகள் 22-Jan-2015 9:54 AM IST Chandru கருத்துக்கள்

வெள்ளாவிப் பொண்ணாக 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் காலடி எடுத்து வைத்த டாப்ஸி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த கடைசி படம் ‘ஆரம்பம்’. தற்போது முனி 3 ‘கங்கா’ படத்தில் லாரன்ஸுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வை ராஜா வை’ படத்தில் வில்லி வேடம் ஏற்றிருக்கிறார் டாப்ஸி. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘பேபி’ பாலிவுட் படத்திலும் டாப்ஸிக்கு சொல்லிக்கொள்ளும்படியான கேரக்டர் கிடைத்திருக்கிறதாம். இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த டாப்ஸி, ‘‘ரித்திக் ரோஷடனும், மணிரத்னத்துடனும் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டுமென்பது தன்னுடைய நீண்டநாள் ஆசை’’ எனக்குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;