கௌதம் கார்த்திக் ஜோடியாக புதுமுகம் சனா!

கௌதம் கார்த்திக் ஜோடியாக புதுமுகம் சனா!

செய்திகள் 22-Jan-2015 9:36 AM IST Chandru கருத்துக்கள்

மணிரத்னத்தின் ‘கடல்’ மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கௌதம் கார்த்திக்கின் 2வது படமாக ‘என்னமோ ஏதோ’ வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயகத்தில் கௌதம் நடித்திருக்கும் ‘வை ராஜா வை’ படம் விரைவில் வெளியாக உள்ளது. லக்ஷ்மிமேனனுடன் அவர் இணைந்து நடித்திருக்கும் ‘சிப்பாய்’ படமும் விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது இந்திரஜித் மற்றும் ரங்கூன் படங்களில் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார். இதில் ‘ரங்கூன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சனா மக்பூல் எனும் புதுமுகத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். தமிழுக்குதான் இவர் புதுவரவே தவிர, தெலுங்கில் ஏற்கெனவே ‘டிக்குலு சூடக்கு ராமய்யா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ரொமான்டிக் டிராமாவாக உருவாகவிருக்கும் இப்படத்தை ராஜ்குமார் இயக்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன. அனிருத் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;