சூர்யா பெயரில் போலி ஃபேஸ்புக் பேஜ்!

சூர்யா பெயரில் போலி ஃபேஸ்புக் பேஜ்!

செய்திகள் 21-Jan-2015 3:00 PM IST VRC கருத்துக்கள்

இதுவரை எந்த சமூக வலைதளங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாதவர் நடிகர் சூர்யா. ஆனால் இவர் பெயரில் யாரோ ஒருவர் ஃபேஸ்புக் வலைதளத்தில் ஒரு கணக்கை துவங்கி அதற்கு அந்த வலைதளத்தின் அதிகாரபூர்வ பக்கம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார். சூர்யா ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டாத நிலையில் அவரது பெயரில் மோசடியாக அக்கவுண்டை துவங்கியுள்ளதை அறிந்த சூர்யா அதற்கு எதிராக சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கக் கோரி சைபர் கிரைமில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;