திருநங்கைகள் பிரச்சனை : ‘ஐ’ மறு தணிக்கையா?

திருநங்கைகள் பிரச்சனை : ‘ஐ’ மறு தணிக்கையா?

செய்திகள் 21-Jan-2015 1:38 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் திருநங்கைகளை இழிவுப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி திருநங்கைகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்சார் போர்டு அதிகாரி வி.பக்கிரிசாமி ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கதைக்கு தேவைப்பட்டதால் ‘ஐ’ படத்தில் திருநங்கைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை அனுமதித்துள்ளோம் என்றும், ‘ஐ’ படத்தை மறு தணிக்கை செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டப்படி தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்ட ஒரு படத்தில் யாரும் குறிக்கிட முடியாது என்றும், எதாவது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அது சமப்ந்தமாக அவர்கள் காவல் துறையையோ அல்லது நீதிமன்றங்களையோ தான் அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;