இளையராஜாவை பெருமைப்படுத்திய பாலிவுட்!

இளையராஜாவை பெருமைப்படுத்திய பாலிவுட்!

செய்திகள் 21-Jan-2015 12:18 PM IST VRC கருத்துக்கள்

‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து இசைத் துறையில் பல சாதனைகள் படைத்துள்ளார். 5 தேசிய விருதுகள், ஏராளமான மாநில அரசு விருதுகள், பத்ம பூஷன் விருது என பல பெருமைகளைப் பெற்றுள்ள இளையராஜா, விரைவில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பாலா இயக்கி வரும் ‘தாரை தப்பட்டை’ படம் இளையராஜா இசை அமைக்கும் 1000-ஆவது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் இசைத் துறையில் இப்படி ஒரு சாதனையை எவரும் நிகழ்த்தியதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பெருமைக்கு சொந்தக்காரரான இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் நேற்று பாராட்டு விழா எடுத்தது. பால்கி இயக்கி அமிதாப்பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் முதலானோர் நடித்து, இளையராஜா இசை அமைத்து, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள ஷமிதாப் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீட்டு விழாவில் தான் இளையராஜாவை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. ‘ஷமிதாப்’ படத்தின் இயக்குநர் பால்கி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இந்த விழாவுக்காக நடிகர் அமிதாப் பச்சன் முன் நின்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என இந்தியாவின் மிக உன்னத கலைஞர்களை பலரை அழைக்க, அனைவரும் இந்த விழாவில் பங்கேற்று, இசைஞானியின் பெரும் சாதனையை கௌரவித்து மகிழ்ந்தனர். நேற்று மும்பையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இவ்விழாவை முடித்துக் கொண்டு இளையராஜ இன்று சென்னை திரும்புகிறார். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் இளையாராவுக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;