நாளை முதல் உதயநிதியின் ஆக்‌ஷன் அவதாரம்!

நாளை முதல் உதயநிதியின் ஆக்‌ஷன் அவதாரம்!

செய்திகள் 21-Jan-2015 10:55 AM IST VRC கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நண்பேன்டா’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து திருக்குமரன் இயக்கத்தில் ‘கெத்து’ என்ற படத்தில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் ‘கெத்து’ என்ற டைட்டிலை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க ‘ஐ’ பட நாயகி எமி ஜாக்ஸன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்திற்காக உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்‌சன் சம்பந்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் சமீபத்தில் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்கவிருக்கிறது.

‘மதராசப்பட்டணம்’, ‘ஐ’ படங்கள் மூலம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் எமி ஜாக்சனுக்கு இப்படத்திலும் கிளாமருக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கெத்து - தில்லு முல்லு பாடல் வீடியோ


;