‘உத்தம வில்லன்’ ரிலீஸ் எப்போது?

‘உத்தம வில்லன்’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 21-Jan-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

ரசிகர்களின்ன் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கமல்ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படம் ஏப்ரல் மாதம் தான் ரிலீசாகுமாம்! கடந்த வருடமே வெளியாக வேண்டிய படம் இது. ஆனால் இப்படத்தின் பலவேறு வேலைகள் முடிக்க சிறிது காலதாமதம் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது அந்த வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது என்றாலும், இப்படத்தை அடுத்த மாதமோ அல்லது மார்ச் மாதமோ ரிலீஸ் செய்யும் திட்டம் இல்லையாம்! காரணம், ஃபிப்ரவரி, மார்ச் மாதங்கள் பரீட்சை காலம் என்பதாலும், மற்றும் இந்த நேரத்தில் உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி துவங்கவிருப்பதாலும் ‘உத்தம வில்லன்’ படத்தை கோடை விடுமுறை காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் இப்படத்தை தயாரிக்கும் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தினர்.

கமல்ஹாசனுடன் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பூஜாகுமார், ஆன்ட்ரியா, பார்வதி மேனன், ஊர்வசி, ஜெயராம் முதலான பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவன்ம் வாங்கியுள்ள நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக விரைவில் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;