பொங்கல் ரிலீஸ் படங்களின் 2வது வார நிலவரம்!

பொங்கல் ரிலீஸ் படங்களின் 2வது வார நிலவரம்!

செய்திகள் 21-Jan-2015 9:23 AM IST Chandru கருத்துக்கள்

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ஷங்கரின் ‘ஐ’ படமும், 15ஆம் தேதி விஷாலின் ‘ஆம்பள’, ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’, பாண்டியராஜன் நடித்திருக்கும் ‘ஆய்வுக்கூடம்’ ஆகிய 4 நான்கு ரிலீஸாகி இருந்தன. இதில் ‘ஐ’ படம் விமர்சனரீதியாக இருவேறு கருத்துக்களை சந்தித்திருந்தாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவை எட்டியிருக்கிறது. குறிப்பாக படம் வெளியான முதல் 5 நாட்களிலேயே (பொங்கல் விடுமுறை) உலகளவில் 125 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. விடுமுறை முடிந்து திங்கள், செவ்வாய் போன்ற கிழமைகளிலும் இப்படத்திற்கு 70 சதவிகித ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்ததாக கூறப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சில தியேட்டர்களில் 100% ஆடியன்ஸ் ‘ஐ’ படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

இந்த வெள்ளிக்கிழமை பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. கேபிள் சங்கர் இயக்கத்தில் ‘தொட்டால் தொடரும்’ படம் மட்டுமே வெளியாகவிருக்கிறது. இதனால் கடந்த வாரத்தைப்போல இந்த வாரமும் ‘ஐ’ படத்திற்கு தியேட்டர்கள் பெரிதாக குறைக்கப்படவில்லை. பி அன்ட் சி தியேட்டர்களில் மட்டும் ஒரு சில காட்சிகள் குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

அதேபோல் விஷாலின் ‘ஆம்பள’ படம் ‘ஏ’ சென்டர்களில் சற்று சரிவைச் சந்தித்துள்ளது. ஆனால் பி அன்ட் சிகளில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் அந்த திரையரங்குகளில் ‘ஆம்பள’ படத்தின் காட்சிகள் பெரிதாக குறைக்கப்படவில்லை.

அதேநேரம் ஸ்டுடியோ கிரீன் வெளியீடான ‘டார்லிங்’ படத்திற்குக் கிடைத்துள்ள ஏகோபித்த வரவேற்பால், பெரிய அளவில் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் படம் 150 திரையரங்களில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகள் உயர்த்தப்பட்டு திங்கள் கிழமை கிட்டத்தட்ட 225 திரையரங்குகளை ‘டார்லிங்’ ஆக்ரமித்தது. இந்த வெள்ளிக்கிழமை முதல் இன்னும் தியேட்டர்கள் அதிகமாகலாம் என்கிறார்கள்.

குறிப்பாக சென்னை சத்யம் சினிமாஸில் ‘ஐ’ படம் 2வது வாரமும் அதே அளவிலான காட்சிகள் ஓடுகிறது. மொத்தம் 50 காட்சிகள் நாள்தோறும் திரையிடப்படுகின்றன. ‘ஆம்பள’ படக் காட்சிகள் முதல் வாரத்திலிருந்த 27 காட்சிகள், 16 காட்சிகளாக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ‘டார்லிங்’ படம் 13 காட்சிகளிலிருந்து 17 காட்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் பொங்கல் விடுமுறை என்பதால் வெளியான 3 படங்களுக்குமே ஓரளவு வருமானம் கிடைத்துள்ளதாக விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;